எதிலும் இரட்டைப் போக்கு, இரட்டை நாக்கு என்று செயற்படும் இந்தியாவை ஆளும் பாஜக அரசு, சிறிலங்கா மீதான வாக்கெடுப்பிலும் இரட்டை நிலைப்பாடு எடுத்துள்ளதை கி. வீரமணி கண்டித்துள்ளார்.
சிறிலங்கா அரசுக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
அதில், சிறிலங்காவுக்கு எதிராக வாக்களிக்காமல் வெளிநடப்புச் செய்ததன் மூலம் பா.ஜ.க.வின் தமிழர் விரோதப் போக்கும் துரோகமும் உலக அரங்கில் அம்பலப்பட்டுவிட்டதை தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சிறிலங்காவில் ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு எதிராக ஐநாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஈழத் தமிழர் உரிமைப் போராட்டத்தில் மிக முக்கியமான கட்டமாகும் என்றும் வீரமணி தெரிவித்துள்ளார்.