ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று தான் வலியுறுத்தி இருந்த நிலையில், இந்தியா வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் சிறிலங்காவுக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்துள்ளதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சாடியுள்ளார்.
தமிழ்நாட்டில் தேர்தல் நடப்பதால் இந்திய அரசு வெளிநடப்பு செய்துள்ளதாகவும், இது சிறிலங்காவுக்கு மிகவும் சாதகமான நிலைப்பாடுதான் என்பதை சிறிலங்கா அரசே ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
வெளிநடப்பு செய்ததற்காக இந்தியாவுக்கு சிறிலங்கா அரசு நன்றி சொல்லி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈழத் தமிழர்களுக்கு விரோதமான பா.ஜ.க. அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு தன்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.