கிளிநொச்சி – உருத்திரபுரீஸ்வரர் ஆலய வளாகத்தில் மேற்கொள்ளப்படவிருந்த அகழ்வு நடவடிக்கை பொதுமக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.
இன்று காலை தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அகழ்வுப் பணிகளுக்காக சென்ற போது, அகழ்வு ஆராய்ச்சிக்கு எதிராக மூன்றாவது நாளாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள், கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதுடன், ஆலயத்தின் வளாகத்தின் பிரதான வாயிலை மூடி அவர்களைத் தடுத்தனர்.
இதையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடனும், தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுடனும் பேச்சு நடத்தினர்.
இதன்போது, இரு தரப்பினரையும் அழைத்து பிரச்சினையை சுமூகமான முறையில் தீர்ப்பதாக உதவி காவல்துறை கண்காணிப்பாளர், தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.