வடகொரியா கடந்த வார இறுதியில், குறுகிய தூர ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளதாக, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வடகொரிய தலைவர் கிம்மின் சகோதரி அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சில நாட்களிலேயே இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவை மிரட்டும் வகையிலேயே, வடகொரியா இந்தச் சோதனையை நடத்தப்பட்டுள்ளமாக கருதப்படுகிறது. ஆனாலும் வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை, பேச்சுவார்த்தைக் கதவுகளை மூடுவதாக அமெரிக்க நிர்வாகம் கருதவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்