கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி மற்றும் காவல் ஆணையர் சுமித் சரண் ஆகியோரை தேர்தல் ஆணையம் அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், கோவை மாவட்ட புதிய ஆட்சியராக நாகராஜனும், காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதமும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் மீது தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டதை அடுத்தே, தேர்தல் அல்லாத பணிகளுக்கு இவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் ஆளும்கட்சிக்கு சார்பாக செயற்பட்டு வந்த நிலையிலேயே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.