சசிகலாவை அதிமுகவில் இணைத்து கொள்வது குறித்துப் பரிசீலிப்போம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு செவ்வி அளித்துள்ள அவர், அதிமுக ஆட்சி அமைவதற்காக அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலாவின் அறிவிப்பு அவருடைய பெருந்தன்மை என்று தாம் நினைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சசிகலா மீது தனக்கு எப்போதும் வருத்தம் இருந்ததில்லை என்றும் அவர், மீது தற்போதும் நன்மதிப்பிருப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் சசிகலாவிற்கு இடம் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கும் அவர், ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்ற கட்சியின் அமைப்பினை ஏற்றுக்கொண்டால் சசிகலாவை அதிமுகவில் இணைத்து கொள்வதற்கு பரிசீலிக்கலாம் என்றும் பதிலளித்துள்ளார்.