ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணை வெற்றிபெற்றுள்ளதன் மூலமாக சிறிலங்காவுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று நடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
மேலும்,வெளிநாட்டு பயணத்தடை, பொருளாதார கொடுக்கல் வாங்கல்கள், ஏற்றுமதி -இறக்குமதி விடயங்களில் தடைகளை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் நடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
‘சர்வதேச விசாரணை அவசியமில்லை. ஆனால், உள்நாட்டு விசாரணைகளை நடத்தியேனும் தீர்வு காணுங்கள். இராஜதந்திர ரீதியிலும், வெளிநாட்டு நட்புறவிலும் தோற்றுள்ளோம் என்ற எச்சரிக்கை இதன் மூலமாக விடுக்கப்பட்டுள்ளது என எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
இராஜதந்திர ரீதியிலும் பலவீனம் கண்டுள்ளோம்.
சிறிலங்காவின் பிரஜைகளை வெளிநாட்டு நீதிமன்றத்தின் முன்னிலையில் நிறுத்தவும் அவர்களுக்கு வெளிநாட்டு பயணத்தடை ஏற்படுவதற்கும் நாம் விரும்பவில்லை.
சிறிலங்காவின் பொருளாதார கொடுக்கல் வாங்கல்கள், ஏற்றுமதி -இறக்குமதி விடயங்களில் எந்தவொரு தடையும் ஏற்படுவதை நாம் விரும்பவில்லை. ஆனால் நேற்று வாக்கெடுப்பின் பின்னர் இந்த காரணிகள் அனைத்துமே சவாலுக்கு உட் படும் விடயமாக மாறியுள்ளது எனவும் அவர் சபையில் சுட்டிக்காட்டினார்.