பிரித்தானியாவில் சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி திட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
The Telegraph நாளேடு குறித்த திட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
எனினும் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் குறித்து செய்யப்பட்ட ஆய்வின் முடிவுகளுக்காக அரச அதிகாரிகள் காத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.
AstraZeneca தடுப்பூசிகளைக் கொண்டு Oxford பல்கலைக்கழகம் முன்னெடுத்திருந்த ஆய்வின் முடிவுகளுக்காவே இவ்வாறு காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
6 முதல் 17 வயதுக்கும் இடைப்பட்ட சுமார் 300 பேரிடம் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் The Telegraph நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில் ஆய்வின் முடிவுகள் வெளியானதன் பின்னரே குறித்த திட்டம் தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.