சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து திடீர் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் எதிர்வரும் 6ஆம் திகதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சேலத்தில் இருந்து பிரசாரத்திற்காக கரூருக்குச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனியார் விடுதிக்குச் சென்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்ச்செல்வத்துடன் ஆலோசனை நடத்தினார்.
இதன்போது, பிரசார சுற்றுப்பயணம் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன