ஓஷாவாவில் தீவிபத்து ஏற்பட்ட வரிசை வீட்டுத் தொகுதியில் இருந்து மேலும் இரண்டு சிறுவர்களின் சடலங்களை மீட்டுள்ளதாக அவசர சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திங்கட்கிழமை அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தை அடுத்து காணாமல் போயிருந்த நான்கு பேரை அவசர சேவை பணியாளர்கள் தேடி வந்தனர்.
திங்கட்கிழமை மாலையில் இரண்டு பேரின் சடலங்களை மீட்டிருந்த நிலையில், மேலும் இரண்டு சிறுவர்களின் சடலங்களைக் கண்டுபிடித்துள்ளதாக நேற்று மாலை அங்கிருக்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து. இந்த தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.
அதேவேளை இந்த விபத்தினால் வரிசை வீட்டுத் தொகுதியில் உள்ள 7 வீடுகள் சேதமடைந்துள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.