பங்களாதேஷில் உள்ள ரோஹிங்கிய ஏதிலிகள் முகாமில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த தீப்பரவல் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 560 பேர் காயமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான அமைப்பை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் 400 பேரளவில் காணாமல் போயுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. பங்களாதேஷின் – கொக்ஸ் பசாரில் உள்ள ஏதிலிகள் முகாமில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் காரணமாக, ஆகக்குறைந்தது 10 ஆயிரம் தங்குமிடங்கள் அழிவடைந்துள்ளன. அத்துடன், 45ஆயிரத்து 500 முதல் 50ஆயிரம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளபோதிலும், முகாமின் சில இடங்களில் புகை சூழ்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், மீட்புப் பணிகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.