வேறு நபர்களின் வங்கி கணக்குகளுக்குள் ஊடுருவி, பண மோசடியில் ஈடுபட்ட வவுனியா இளைஞன் ஒருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கறுப்புப்பண சுத்திகரிப்பு சட்டவிதிகளின் கீழ் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
வவுனியா – வேப்பகுளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த இளைஞனின் தனியார் வங்கி கணக்கிற்கு, அமெரிக்காவிலிருந்து ஒரு கோடி இரண்டு இலட்சத்து 58 ஆயிரத்து 399 ரூபா பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, விசாரணைகளை ஆரம்பித்த குற்றப் புலனாய்வு பிரிவினர், சந்தேக நபரான இளைஞன் ஏனைய நபர்களின் வங்கி கணக்குகளுக்கு அத்துமீறி பிரவேசித்தே இந்த பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.