பீஹார் சட்டமன்றத்தில், ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து, உறுப்பினர்கள் பலர் வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
பா.ஜ.க ஆதரவுடன் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெறும் நிலையில், சிறப்பு காவல்துறையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டம் பீஹார் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தங்களை பேச விடாமல் தடுப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியதால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது.
இதையடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தூக்கி வெளியே வீசப்பட்டதுடன், பெண் உறுப்பினர் உள்ளிட்ட சிலர் மீது தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் காயமடைந்துள்ளனர் என்றும், இந்த தாக்குதலுக்கு காவல்துறையினரும் உடந்தை எனவும், எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி குற்றம் சாட்டி உள்ளார்.