இஸ்ரேலில் நடைபெற்று முடிந்த தேர்தலில் மீண்டும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ (Benjamin Netanyahu) வெற்றி பெற்றுள்ளார்.
4ஆவது முறையாக நடந்த தேர்தலில் பிரதமர் நெதன்யாஹூ மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.
இதுகுறித்து தனது கீச்சகப் பதிவிட்டுள்ள நெதன்யாஹூ, (Netanyahu) தேர்தலில் அமோக வெற்றி பெறச் செய்த இஸ்ரேல் மக்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
மேலும் கட்சி உறுப்பினர்கள் அனைவரிடமும் பேசியதாகவம் அவர்களிடம் பொறுப்பான நடவடிக்கையை எடுத்து ஒரு நிலையான அரசாங்கத்தை அமைப்போம் என கூறியதாகவும் பதிவிட்டுள்ளார்.
அத்தோடு, இஸ்ரேலின் அனைத்து குடிமக்களையும் கவனித்துக்கொள்ளும் ஒரு அரசாங்கத்தை உருவாக்குவோம் என தெரிவித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.