யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் மணிவண்ணன் தன்னைத் தானே சுயதனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
கடந்த 20 ஆம் நாள் நெல்லியடியில் இடம்பெற்ற திருமண விழாவில், கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நிகழ்வில் பங்குபற்றிய தானும் தன்னை தானே சுயதனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மாநகர் முதல்வர் மணிவண்ணன் இன்று பி.சி.ஆர் பரிசோதனையும் செய்து கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
குறித்த காலப்பகுதியில் தன்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அவதானமாக இருக்குமாறும், அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன் காரணமாக இன்று இடம்பெறவிருந்த யாழ். மாநகர சபை அமர்வுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.