வடக்கு, கிழக்கில் சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொல்பொருள் என்ற பெயரில் தமிழ் மக்களின் வளங்கள் சுரண்டப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர்,
“வடக்கு, கிழக்கில் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து இருக்கின்றனர்.
அவர்கள், வடக்கு கிழக்கின் அபிவிருத்திக்கும், தொல்பொருள் சின்னங்கள் என்ற பெயரில், தமிழ் மக்களின் வளங்கள், அபகரிக்கப்படுவதற்கு எதிராகவும் அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.
அபிவிருத்தி என்ற பெயரில் எமது காணிகள் அபகரிக்கப்படுவதை, அவர்கள் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும்.“ என்றும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.