சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவை நிறைவேற்றியிருந்தாலும், ஐ.நா முகவர் அமைப்புகளுடன் இணைந்து தமது அரசாங்கம் தொடர்ந்து இணைந்து செயற்படும் என்று, வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஜெனிவா தீர்மானம் தொடர்பாக இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்திய அவர்,
“சிறிலங்கா அரசாங்கம் இந்த தீர்மானத்தை நிராகரித்து விட்டது.
இந்தமுறை தீர்மானம், பேரவையின் பெரும்பான்மை உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.
இது தேவையற்ற தீர்மானம் என்று சிறிலங்கா அரசாங்கம் கருதுகிறது. சிறிலங்காவுக்கு எதிரான இந்த தீர்மானம் சட்டவிரோமானது.
சிறிலங்கா ஒரு இறைமையுள்ள நாடு என்பதுடன் அதன் இறையாண்மையையும் பாதுகாக்கும்.
சிறிலங்காவின் தேர்தல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை எழுப்பியுள்ள கரிசனைகளையும் நாங்கள் நிராகரிக்கிறோம்.
பொறுப்புக்கூறல் விவகாரங்களை உள்நாட்டு செயல்முறைகளின் ஊடாகவே கையாளுவோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.