கொரோனா தொற்றுக்கு எதிராக போராடுவதற்காக சுகாதார மற்றும் மருத்துவத்துறைக்கு வரவுசெலவுத் திட்டத்தில் அதிகளவு நிதி ஒதுக்கப்படுவதாக ஒன்ராறியோ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போரிடுவதற்காக, ஒன்ராரியோ மக்களின் சுகாதார மற்றும் நலன் காப்புக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய மருத்துவமனைகள் மற்றும் அவற்றின் சேவைகளை மேம்படுத்துவதற்கு சுகாதாரத் துறைக்கு மேலதிகமாக 1.8 பில்லியன் டொலர் ஒதுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் பிசிஆர் சோதனை மற்றும் தொடர்பாளர்களை கண்டுபிடிப்பதற்காக மேலதிகமாக 2.3 பில்லியன் டொலர் ஒதுக்கப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
சுகாதார பராமரிப்பு செலவின அதிகரிப்பு மற்றும், வணிகர்களுக்கான மானியங்களால், மாகாண அரசுக்கு மேலதிகமாக 100 பில்லியன் டொலர் கடன் ஏற்படும் என்றும் இதனை 2029ஆம் ஆண்டுக்குள் திருப்பிச் செலுத்த முடியாதிருக்கும் என்றும் முதல்வர் டக்போர்ட் தெரிவித்துள்ளார்.