சிங்கப்பூரில் 45 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தும் பணிகளை சிங்கப்பூர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்காக இணையதளம் மூலம் பதிவுகளை மேற்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய, குறித்த வயதெல்லைய உடையவர்கள், தங்களைப் பதிவுசெய்து கொள்ளலாம் என சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதேநேரம், அனைத்து பிரஜைகளுக்கும் தடுப்பூசி விரைவில் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் உறுதிப்பாடு வழங்கப்பட்டுள்ளது