சிறிலங்கா அரசாங்கம் தனது போக்கை மாற்றிக் கொள்ளும் என்று நம்புவதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிசேல் பச்லெட் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், பிபிசிக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த கால குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலைத் தொடர ஐ.நா மனித உரிமைகள் பேரவை முடிவு செய்திருப்பதாகவும், மிசேல் பச்லெட் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் உள்ள அனைத்து சமூகங்களிலிலும் பாதிக்கப்பட்டவர்கள் உண்மை மற்றும் நீதியைப் பின்தொடர்வதில் உள்ள அர்ப்பணிப்பை பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கம் தனது போக்கை மாற்றிக் கொண்டு, சிறுபான்மையினர், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் ஊடகங்களின் முழு பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்று நம்புவதாகவும் மிசேல் பச்லெட் மேலும் தெரிவித்துள்ளார்.