தமிழகத்தில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படமாட்டாது. கொரோனா பாதித்த பகுதிகளில் மட்டும் சிறியளவிலான ஊரடங்கை அமுல்படுத்த அரசு முடிவெடுத்து உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ள நிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
“கொரோனா பாதித்த தெருக்கள், வீடுகள் உள்ள பகுதிகளில் மட்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படும்.
நெருக்கடியை எதிர்கொள்ள தமிழகத்தில் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள், செயற்கை சுவாசக் கருவிகள் , மருந்துகள், தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளன..
பொது மக்கள் கொரோனா தடுப்பூசியையும் போட்டு கொள்ள வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.