அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் முதலாவது செய்தியாளர் சந்திப்பு வெள்ளை மாளிகையில் இன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது பேசிய அவர், முதல் 100 நாளில் 200 மில்லியன் தடுப்பூசி செலுத்துவதே தனது அரசின் இலக்கு என்று தெரிவித்துள்ளார்.
“எனது அரசின் இலக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளேன். உலகில் உள்ள வேறு எந்த நாடும் எமது இலக்கின் அருகில் வரமுடியாது என்பதை அறிவேன்.
100 நாட்களில் 200 மில்லியன் தடுப்பூசி செலுத்துவது என்பது மிகவும் சவாலான பணி. ஆனால் எம்மால் முடியும் என நம்புகிறேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.