யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் மணிவண்ணனுடன் கடந்த ஒரு வாரகாலத்தில் தொடர்பை பேணியவர்கள் உடனடியாக தங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
நெல்லியடியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அந்த நிகழ்வில் பங்கேற்ற யாழ். மாநகர சபை முதல்வர் மணிவண்ணனுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் நீதிமன்றங்களில் அவருடன் தொடர்பை பேணிய பலர் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே அவருடன், மார்ச் 16ஆம் நாளுக்குப் பின்னர் கடந்த ஒரு வார காலமாக தொடர்பைப் பேணியவர்களை உடனடியாகத் தம்முடன் தொடர்பு கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.