ரஷ்யாவின் ஒன்பது உயர்மட்ட அதிகாரிகளுக்கு எதிராக கனடா புதிய தடைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவல்னியை (Alexei Navalny) கொலை செய்ய முயன்றது, சிறையில் அடைத்தது உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களை மேற்கொண்டமை தொடர்பாகவே இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக, கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் காரனியோ (Marc Garneau) தெரிவித்துள்ளார்.
தனது சொந்த மக்களின் அடிப்படை உரிமைகளையும், சர்வதேச சமூகம் பலமுறை கரிசனைகளை எழுப்பியதையும், ரஷ்ய அரசாங்கம் மதிக்கத் தவறி விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும், ரஷ்யாவுக்கு எதிராக புதிய தடைகளை விதித்துள்ள நிலையில், கனடாவும் இந்த தடையை அறிவித்துள்ளது.