ரொரண்டோ Mount Dennis பிரதேசத்தில் உள்ள, Our Lady of Victory கத்தோலிக்கப் பாடசாலை, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாடசாலையில் கல்வி கற்கும் 12 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, பாடசாலையின் அனைத்து செயற்பாடுகளையும் நிறுத்துமாறு ரொறன்ரோ பொது சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.
பாடசாலை மீள ஆரம்பிக்கப்படும் நாள், உறுதி செய்யப்பட்டதும், பாடசாலை சமூகத்தினருக்கு அறிவிக்கப்படும் என்று, ரொறன்ரோ பொது சுகாதார அதிகாரிகள் கீச்சகத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
பாடசாலையில் கண்டுபிடிக்கப்பட்ட 12 தொற்றாளர்களில் 9 மாணவர்கள், Eglinton Avenue West பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
ரொறன்ரோவில் இந்த வாரத்தில் கொரோனா தொற்றினால் மூடப்படுகின்ற இரண்டாவது கத்தோலிக்க மாவட்ட பாடசாலை இதுவாகும்.
திங்கட்கிழமை 3 மாணவர்களுக்கும் 6 பணியாளர்களுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, Jane and Finch பிரதேசத்தில் உள்ள St. Charles Garnier கத்தோலிக்க பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.