தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தில் இடம்பெற்று வரும் நிலையில், திருவண்ணாமலை தொகுதி தி.மு.க. வேட்பாளர் எ.வ.வேலுவின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
20 வாகனங்களில் சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் எ.வ.வேலுவுக்கு சொந்தமான, திருவண்ணாமலையில் உள்ள 2 பொறியியல் கல்லூரிகள், 2 கலை அறிவியல் கல்லூரிகள், ஒரு தொழில்நுட்பக் கல்லூரி, ஒரு சர்வதேச பாடசாலை ஆகியவற்றில், சோதனையை தொடங்கியுள்ளனர்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று எ.வ.வேலுவை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, திருவண்ணாமலையில், எ.வ.வேலுவின் கல்லூரியில் தங்கி இருந்தார்.
அவர் பிரசாரத்தை தொடங்குவதற்காக வெளியே சென்ற சிறிது நேரத்தில் வருமானவரி அதிகாரிகள் அங்கு சோதனையை ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன், திருவண்ணாமலையில் உள்ள எ.வ.வேலுவின் வீடு, குடிநீர் நிறுவன அலுவலகம், ஆழ்வார்பேட்டையில் உள்ள வீடு, பல்வேறு அலுவலகங்கள் என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை இடம்பெறுகிறது.
இந்தச் சோதனையில், பணம் மற்றும் பொருட்கள் சிக்கியதா என்பது பற்றிய எந்த தகவலையும் வருமானவரித்துறை வெளியிடவில்லை.வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை