எடப்பாடி பழனிச்சாமி அடுத்த முதலமைச்சர் என்ற கனவை காணமுடியாது என தி.மு.க. தலைவரும் வேட்பாளருமாகிய ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் அங்கு உரையாற்றுகையில், எனது கனவு பலிக்காது என்று முதலமைச்சர் பழனிசாமி கூறி வருகிறார்.
நானாவது கனவு காண்கிறேன், அவருக்கோ அடுத்த முதலமைச்சர் பதவி என்பதைக்கூட கனவில் காண முடியாது என விமர்சித்துள்ளார்.
மேலும், ஆளும் கட்சியினர் கொரோனா காலத்தில் கூட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை, கொரோனா காலத்தில் கழகத் தோழர்கள் அத்தனை பேரும் களத்தில் இறங்கிப் பணியாற்றி உதவி செய்தது தி.மு.க.வின் மிகப்பெரிய வரலாறு என்பதை நான் சொல்ல விரும்புகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.