சுயஸ் கால்வாயின் ஊடாக பயணம் மேற்கொண்ட 400 மீட்டர் நீளமான எவர்க்ரீன் கப்பல், அசாதாரண காலநிலை காரணமாக கடந்த 22 ஆம் திகதி கடலில் குறுக்காக சிக்கிக்கொண்டது. இவ்வாறு சிக்கிக்கொண்ட கப்பலை மீட்கும் பணிகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது.
இருப்பினும் சிக்கிக் கொண்ட கப்பலை மீட்கும் பணிகள், திங்கள் கிழமை வரை நீடிக்கலாம் என மீட்புக்குழு தெரிவித்துள்ளது.
உலகின் கப்பல் வழி வணிகத்தில் 12 சதவீதமானவை சுயஸ் கால்வாய் வழியாகவே நடைபெறுகிறது.
இந்தநிலையில், சுயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்ட கப்பலால், அந்த வழித்தடத்தில் வேறு எந்தப் போக்குவரத்தும் நடைபெறவில்லை. சுயஸ் கால்வாய் முழுவதும் கப்பல்கள் தேங்கி நின்று வருகின்றன.
இதனால், ஒருநாளைக்கு கிட்டத்தட்ட 9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, ஜப்பானிலுள்ள இக்கப்பலின் உரிமையாளர் இச்சம்பவத்தால் பாதிப்பை எதிர்கொண்டவர்களிடம் தான் மன்னிப்பு கோருவதாக அறிவித்தார்