வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் பாடசாலைகளில், காலை நேர பிரார்த்தனைகளுக்கு மாணவர்களை ஒன்று கூட்ட வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, வட மாகாண கல்வி அமைச்சினால், பாடசாலை அதிபர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நேற்று மாலை நடத்தப்பட்ட கொரோனா தடுப்புச் செயலணிக் கூட்டத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடிவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தரம் 5, தரம் 11 , தரம் 12, தரம் 13 மாணவர்களுக்கு மட்டும், தனியார் கல்வி நிறுவனங்களில் வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





