தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் மகன் மீது இனந்தெரியாத ஆயுதக் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இன்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் வீட்டிற்குள், வாள்கள், கண்ணாடி போத்தல்கள், இரும்புக் கம்பிகளுடன் நுழைந்த குழுவினரே தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.
4 உந்துருளிகளில் சென்ற 8 பேர் கொண்ட குழுவே இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் மூத்த மகன் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் என்றும், அவரது உந்துருளியும், சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.