அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடு குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்றும், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேர்தல் பிரசாரம் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் திகதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2ஆம் திகதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, அ.ம.மு.க. கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகி ன்றமை குறிப்பிடத்தக்கது.