பங்களாதேஷின் 50ஆவது சுதந்திரப் பிரகடன தினம் இன்றாகும்.
இதனை முன்னிட்டு பங்களாதேஷ் விடுதலைக்கான போரில் மரணத்தவர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டபோது இராணுவ மரியாதையுடனான தேசிய கொடியேற்றும் நிகழ்வும் நடைபெற்றது.
இதில் அந்நாட்டு பிரதமர் ஹசீனா, தலைமை வகித்திருந்ததோடு ஜனாதிபதியும் பங்கேற்றிருந்தார்.
இதேவேளை, இரண்டு நாள் பயணமாக இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியும் பங்களாதேஷிற்குச் சென்றுள்ளார்.
அவர் இன்றையதினம், விடுதலைப்போர் வீரர்களின் நினைவிடத்தில் வணக்கம் செலுத்தியதோடு தேசிய நிகழ்வுகளிலும் உத்தியோக பூர்வமாக பங்கெடுத்திருந்தார்.