மியன்மாரில் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டு ஊடகங்கள் மற்றும் உள்ளூர் மனித உரிமை கண்காணிப்பு குழுக்கள் என்பன இதனை தெரிவித்துள்ளன.
கொல்லப்பட்டுள்ளவர்களில் 90 சதவீதமானோர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மியன்மாரில் கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் இது வரையில் 350 பேர் கொல்லப்பட்டதாக அங்கு நிலைகொண்டுள்ள மனித உரிமைகள் குழுவொன்று குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் மியன்மாரில் சுமார் மூவாயிரம் பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஊடகவியலாளர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.