ரொறன்ரோ- விக்ரோரியா பார்க் (Victoria Park) அருகே, Steeles Avenues இல், வாகன விபத்தில் சிக்கிய இளைஞன் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
நேற்றிரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய இளைஞன், சுமார் 30 வயது மதிக்கத்தக்கவர் என்றும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவரது நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும், கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்தை அடுத்து, குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.