நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் விடயத்தில், அர்த்தமுள்ள முன்னேற்றத்தை எட்டுவதற்கான, முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக, பிரித்தானியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, வெளிவிவகார பணியக, இராஜாங்க அமைச்சர் தாரிக் அஹமட்,
“சிறிலங்கா மீதான தீர்மானம், மோதலுக்கு பிந்தைய நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டைக் குறிக்கிறது.
கடந்த காலத்தின் கடுமையான மனித உரிமை மீறல்கள் சிறிலங்காவில் மீளவும் ஏற்படக் கூடிய அபாயம் இருப்பதாக எச்சரித்த, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைக்கும் இது பதிலளிக்கிறது.
ஐ.நா. தனது கண்காணிப்பைத் தொடர வேண்டும். அத்துடன், எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளை ஆதரிப்பதற்கான ஆதாரங்களை சேகரிக்க வேண்டும்.
இந்த விடயத்தில் ஆக்கபூர்வமாக செயற்படுவதற்கு பிரித்தானியா தயாராக இருக்கிறது.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.