இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணியினருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் இன்று கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.
களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் மட்டக்களப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது சமகால அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்வரும் காலத்தில் தேர்தலுக்கு முகங்கொடுத்தல், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், தற்போதைய அரசியல் நிலைமைகளில் தேசியம் சார்ந்து இளைஞர்களின் வகிபாகம் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுபோன்றதொரு கலந்துரையாடலை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரனும், சாணக்கியனும் யாழ்ப்பாணத்திலும் நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.