ஜோன்சன் அன் ஜோன்சன் நிறுவனத்திடம் இருந்து 10 மில்லியன் கொரோனா தடுப்பு மருந்து, கனடாவுக்குக் கிடைக்கவுள்ளது.
இந்த தடுப்பு மருந்து ஒருமுறை மட்டுமே செலுத்த வேண்டியது என்று கொள்வனவு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டில் இந்த தடுப்பு மருந்து, கனடாவுக்கு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தடுப்பு மருந்து விநியோகம் தொடர்பான, அட்டவணைக்காக காத்திருப்பதாகவும், அமைச்சர் அனிதா ஆனந்த் மேலும் கூறியுள்ளார்.