தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல், இலஞ்சம் தொடரும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
கல்வி மருத்துவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
ஊழல், இலஞ்சத்தை ஒழிப்பதற்காக தமது கட்சி செயற்படும் என குறிப்பிட்ட அவர் கடந்த 50 ஆண்டு கால ஆட்சிகளால் மக்களுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும் ஈழத்தில் 60 ஆண்டு கால கனவை காங்கிரஸும், தி.மு.க.வும் கைகோர்த்து அளித்தது என்றும் சீமான் குற்றம் சாட்டினார்.