பண்டிகை காலங்களில் மக்கள் ஒன்றுக்கூடுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது.
எதிர்வரும் மார்ச் 28 ஆம் திகதி, ஹோலி பண்டிகையும் எதிர்வரும் 4 ஆம் திகதி ஈஸ்டர் பண்டிகையும் மே மாதம் ரமழான் பண்டிகையும் மக்களினால் கொண்டாடப்பட இருக்கின்றன.
இதன்போது மக்கள் ஒன்றுக்கூடுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கு சுகாதார அமைச்சினால் முன்மொழியப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை மக்கள் கடைபிடிக்கின்றார்களா என்பதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்.
அதேபோன்று பொது இடங்களில் தொற்று பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.