பருவநிலை மெய்நிகர் உச்சிமாநாட்டில் பங்கேற்க 40 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் பருவநிலை மாற்றம் குறித்த மெய்நிகர் உச்சிமாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் புதைபடிம எரிபொருள்கள் பயன்பாடு, காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் வெப்பநிலையைக் குறைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், காலநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கையின் மூலம் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் மோடி, சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் (XI JING PING), அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் (SOCT MORISION) மற்றும் ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா (Yoshihide Suka) உள்ளிட்ட தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.