நாளை நடைபெறவுள்ள கிளிநொச்சி – புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழாவில், வெளிமாவட்ட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தாகரன் தெரிவித்துள்ளார்.
100 பேருக்குக் குறைவானவர்களே பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆலய நிர்வாகத்தினர் பொறுப்புடன் செயற்படுவதாக வாக்குறுதி அளித்துள்ளதாகவும், இந்த அறிவுறுத்தலிற்கு அமைவாக பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.