கடந்த பெப்ரவரி மாத இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் மியன்மாரில், கொல்லப்பட்ட எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கை 320 கடந்துள்ளதாக, நாட்டின் அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் தெரிவித்துள்ளது.
தெற்கு மியான்மரில் உள்ள மெய்க் நகரில் மேலும் மூன்று பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக மியன்மார் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் மக்களால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வெளியேற்றிய பின்னர், இராணுவத்தால் இதுவரை கிட்டத்தட்ட மூவாயிரம் பேர் கைது செய்யப்பட்டடு குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அல்லது தண்டிக்கப்பட்டுள்ளனர்.