மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
மும்பையில், டிரீம்ஸ் மால் (Dreems Mall) என்ற வணிக வளாக கட்டிடத்தின் மேல்தளத்தில் செயற்பட்டு வந்த தனியார் மருத்துவமனையிலேயே தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
வணிக வளாக கட்டிடத்தின் முதல்தளத்தில் ஏற்பட்ட தீ மேல்தளத்தில் இருந்த தனியார் மருத்துவமனையிலும் பரவியதாகவும், இதனால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா தொற்றாளர்கள் உள்ளிட்ட பலர் சிக்கிக்கொண்டனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் மருத்துவமனையில் சிக்கிக் கொண்ட பலரை மீட்டுள்ளனர்.
எனினும், இந்த தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், அவர்களில் பெரும்பாலானோர் கொரோனா நோயாளிகள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.