மேலும் மூன்று ரபேல் போர் வானூர்திகளை பிரான்ஸ் அடுத்தவாரம் இந்தியாவிடம் ஒப்படைக்கவுள்ளது,
பிரான்சிடம் இருந்து 36 அதிநவீன ரபேல் போர் வானூர்திகளை, கொள்வனவு செய்ய 2016-ம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் செய்திருந்தது.
இதுவரை 11 ரபேல் போர் வானூர்திகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அடுத்தவாரம்,மேலும் 3 வானூர்திகளும், அடுத்த மாதத்தில் மேலும் 9 போர் வானூர்திகளும் ஒப்படைக்கப்படவுள்ளன.
அதிநவீன ரபேல் போர் வானூர்திங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது இந்திய வான்படைக்கு பெரும் பலமாக அமையும் என்றும், புதிதாக வரும் வானூர்திகள், மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஹசிமாரா வான்படை தளத்தில் நிறுத்தப்படும் என்றும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் இந்தியாவின் கிழக்குப் பகுதியின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.