இரண்டு நாள் பயணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்களாதேஷ் சென்றுள்ள நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
பங்களாதேசின் 50வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்களில் பங்கேற்க, இந்தியப் பிரதமர் மோடி இன்று காலை டாக்கா சென்றடைந்துள்ளார்.
அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து டாக்காவில் மாணவர்கள் உள்ளிட்ட சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது, காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் நடந்த மோதலில் 40 பேர் காயம் அடைந்துள்ளனர்.
போராட்டம் தொடர்பாக 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், தகவல்கள் தெரிவிக்கின்றன.