கொரோனா பரவலினால், வத்திக்கானில் உள்ள அருங்காட்சியகங்கள், புனித தலங்கள், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருப்பதால், பெருமளவில் வருமான இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கர்தினால்களுக்கும், ஏனைய மத குருக்களுக்குமான சம்பளத்தைக் குறைக்க பாப்பரசர் பிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பளக் குறைப்பு, ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கர்தினால்களுக்கு, 10 சதவீதமும், மத குருக்களுக்கு 3 சதவீதம் முதல் 8 சதவீதம் வரையிலும், சம்பள குறைப்பு செய்யப்படவுள்ளது.
நிதி நெருக்கடியினால், யாரும் வேலைநீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்றும், பாப்பரசர் பிரான்சிஸ் அறிவித்துள்ளார்.