சிறிலங்காவுக்கு சீனா கொடையாக வழங்கவுள்ள ஆறு இலட்சம் கொரோனா தடுப்பு மருந்துகளில் பெரும்பாலானவை உள்ளூர் மக்களுக்கே கிடைக்கும் என்று கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 31ஆம் நாள் இந்த தடுப்பு மருந்துகள் சிறிலங்காவிடம் கையளிக்கப்படவுள்ள நிலையில், இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள சீன தூதரக அதிகாரி ஒருவர்,
“சீனா தடுப்பூசிகளை சிறிலங்காவுக்கு கொடையாகவே வழங்குகிறது. சிறிலங்கா அரசாங்கம் தான், இங்குள்ள சீனர்களுக்கு தடுப்பூசிகளை போட முன்வந்துள்ளது.
சீனா வழங்கவுள்ள தடுப்பு மருந்துகளில் பெரும்பாலானவை உள்ளூர் மக்களுக்கே கிடைக்கும், ஒரு வீதமான மருந்து தான் சீனர்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.” என் றுதெரிவித்துள்ளார்.
இதனிடையே, சினோபார்ம் தடுப்பு மருந்தை அவசரகால தேவைக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண கூறியிருந்த போதும், இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு அரச மருந்துக் கூட்டுத் தாபனத்துக்கு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.