நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு, வரும் 30ஆம் நாள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.
சிறியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பரிசோதனைக்காக டெல்லியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று மதியம் மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
இதையடுத்து, மார்ச் 30ஆம் நாள் காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், அறுவை சிகிச்சைக்கு மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் ராம்நாத் கோவிந்த் உடல்நிலை சீராக உள்ளதாகவும், இந்திய ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.