புதிதாக பரவி வரும் உருமாற்றமடைந்த கொரோனா வைரசினால், அத்தியாவசியப் பணியாளர்கள் மற்றும் குறைந்த வருமான மட்டத்தில் உள்ளவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
அத்தியாவசிய பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர் மத்தியில் இந்த தொற்று வேகமாக பரவுகிறது என்று ஆய்வில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
உருமாற்றமடைந்த வைரசினால் பாதிக்கப்படுபவர்களில் கிட்டத்தட்ட 44 வீதமானோர், குறைந்த வருமானம் பெறுபவர்கள் என்றும், அதிக வருமானம் பெறுபவர்கள் மத்தியில் இந்த தொற்று பாதியளவிலேயே பரவுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், அத்தியாவசிய சேவைப் பணியாளர்கள மத்தியில், 50 வீதத்துக்கும் அதிகமானளவு தொற்று பரவல் காணப்படுவதாகவும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக ஹமில்டன் McMaster பல்கலைக்கழகத்தின் தொற்று நோயியல் நிபுணரும், ஆராய்ச்சியாளருமான மருத்துவர் சாய்ன் சாக்லா (Dr. Zain Chagla) தெரிவித்துள்ளார்.