கொரோனா வைரஸ் நெருக்கடிக்கும் மத்தியில், பாகிஸ்தான், ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளது.
ஷகீன்-1ஏ (Shaheen-1A என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பாகிஸ்தான் நேற்று சோதனை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தரையில் இருந்து தரை இலக்கை தாக்கி அழிக்கும் இந்த ஏவுகணை, 900 கிலோ மீற்றர் வரை வீச்செல்லை கொண்டது என்றும் கூறப்படுகிறது.
அணு ஆயுதம் உள்ளிட்ட எந்த ஆயுதங்களையும் இது தாங்கி செல்லும் திறன் பெற்றது என்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
‘ஷகீன்-1ஏ’ ஏவுகணை சோதனை வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.